பிஷப் பிராங்கோ விடுதலையா? தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சி

by Editor / 14-01-2022 10:45:58pm
பிஷப் பிராங்கோ விடுதலையா? தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சி

கேரள மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் கொச்சினில் உள்ள கன்னியாஸ்திரி ஒருவர், கத்தோலிக்க பிஷப் பிராங்கோ முலக்கல்  தனனி பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 கடந்த 2008ம் ஆண்டில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின் தீர்ப்பை கோட்டயம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிறது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் குற்றவாளி என்று நிரூபணம் செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் பாதிரியார் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார் என்று நீதிபதி கோபக்குமார் உத்தரவிட்டிருக்கிறார்.இந்த தீர்ப்பு குறித்து பாதிரியார் பிராங்க்கோ இறைவனுக்கு நன்றி  தெரிவித்திருக்கிறார்.  அவர் மேலும்,  உண்மையாக உண்மை இறுதியாக வெல்லும் என்ற நம்பிக்கை பொய்யாகி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.பிஷப் பிராங்கோ முலக்கல் விடுதலை செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.   பாதிக்கப்பட்ட பெண் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.    இந்த நீதிப்போராட்டத்தில் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக தேசிய மகளிர் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என்றும் ரேகா ஷர்மா தெரிவித்திருக்கிறார்.

 

Tags :

Share via