மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் இல்லை - கேரள நீதிமன்றம்.

by Editor / 15-01-2022 08:38:38pm
மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் இல்லை - கேரள நீதிமன்றம்.

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில்  பிரபல மால்களில் ஒன்றான லுலு மாலில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை எதிர்த்து கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்றும் கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது.வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்றும், கட்டட விதிகளின்படி, போதிய வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்று  நீதிபதி கருத்து.

 

Tags : No parking in Kerala malls - Kerala court.

Share via

More stories