பீக்பாஸில் வெற்றி பெற்ற ராஜீ

by Admin / 16-01-2022 10:43:08pm
பீக்பாஸில் வெற்றி பெற்ற ராஜீ


பிக் பாஸ் சீசன்-5  இன்றுடன் நிறைவு பெறுகிறது.கடந்த முன்று மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி தொடரை எல்லாம் பின்னுக்கு தள்ளி டி .ஆர்.பி ரோட்டில்
புதிய உச்சத்திலிருந்தது.இதற்கு முன்பிருந்த சீசனை விட இது விறுவிறுப்பாகச் சென்றதாக ரசிகர் தரப்பு கருத்து. சிபி புத்திசாலியாக பன்னிரன்டு லட்சத்தோடு வெளியேறினார். ஹாஸ்டல் கதாபாத்திரத்தில் ஹிட்லர் போல நடக்காதிருந்தால் ராஜீக்கும் சிபிக்குமிடையே கடும் போட்டி நிலவியிருக்கும்.தாமரை பரமபத விளையாட்டு போன்று உச்சத்தில் ஏறி..சர்ரென்று கீழே விழந்து விட்டார் .தாமரையை ஒவ்வொருவரும் உசுப்பேற்றியதன் விளைவு அவர் தனக்கு தான் இந்த பரிசு என்கிற மிதப்பில் இருந்து விட்டார்.சிபியின் பேச்சை கேட்டிருந்தால் பன்னிரண்டுலட்சம்  லாவகமாக கைகளுக்குள் வந்நிருக்கும்.பெரும்பாலும் பிற பெண்களுடன் நடந்து கொள்கிற-பேசுகிற முறை உற்று கவனிக்கப்பட்டு,தேர்வினை ரிசிகர்கள் வாக்குகளாக மாற்றி வெற்றி பெற செய்திருக்கிறார்.அந்த வகையில் காமெடி கலந்து  ..யாரையும் முகம் சுளிக்காது நடந்து கொண்ட ராஜீக்கு ஐம்பது லட்சத்தோடு திரையுலகமும் வாசலை திறந்து வைத்திருக்கிறது. ரன்னராக பிரியங்கா வந்திருக்கிறார்.

 

Tags :

Share via