கேரளாவில் முதல் தவணை தடுப்பூசி 100% பேருக்கு செலுத்தப்பட்டது - மாநில அரசு தகவல்.

by Writer / 21-01-2022 07:34:40pm
கேரளாவில் முதல் தவணை தடுப்பூசி 100% பேருக்கு செலுத்தப்பட்டது - மாநில அரசு தகவல்.

கேரள மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100%  செலுத்தப்பட்டு விட்டதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100% பேருக்கு (2,67,09,000 பேர்) முதல் தவணை தடுப்பூசியும், 83% பேருக்கு (2,21,77,950 பேர்) இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் அங்கு 33% பேருக்கு (2,91,271 பேர்) முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரில் 61 சதவீதம், அதாவது 9,25,722 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை கேரளாவில் 5 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via