போலீசார் மீது துப்பாக்கிச் சூடு .பலியான காவல் அதிகாரிகள்.

by Admin / 22-01-2022 01:56:36pm
போலீசார் மீது துப்பாக்கிச் சூடு .பலியான காவல் அதிகாரிகள்.

நியூயார்க் நகரில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் இதுவரை மட்டும்  நான்கு போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவத்தில் பலியான காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் 22 வயதான புதுமுக அதிகாரி என்பது வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் நியூயார்க் நகரத்தின் போலீஸ் அதிகாரியான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.காவல் அதிகாரிகளான மற்றொரு ஜோடியும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து ஒருவர் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை உயிரிழந்த நான்கு காவல் அதிகாரிகளில் ஒருவரை மட்டுமே அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவரும் புதுமுக அதிகாரியானஅவருக்கு வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான மேயர் எரிக் ஆடம்ஸ் என்பவர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது இது கொலையாளிகளுக்கு எதிரான நகரம் , இது மூன்று அதிகாரிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல நியூயார்க் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
 
மேலும் தொற்றுநோய்களின் போது வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி நகரத்தின் தலைமை பொறுப்பை ஆடம்ஸ் ஏற்றதாகவும் இது அவருக்கு ஒரு சவலாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஆடம்ஸ் பிரச்சாரம் மையத்தில் பொது பாதுக்காப்பில் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டவராக கருதப்படுகிறார்.

இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று 911 என்ற அழைப்பிற்கு மூன்று அதிகாரிகள் பதிலளித்துள்ளதாக சொல்லப்பட்டது அதில் தன் மகன் சண்டையிடுவதாக கூறி ஒரு பெண் போன் செய்ததாக கூறப்பட்டது. 

அதனை பார்க்க சம்பவ இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகளை சிறிதி நேரத்தில் அந்த பெண்ணோடு இருந்த வயது வந்த மகன் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. அப்பகுதிக்கு சென்ற மூவரும் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via