முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

by Editor / 18-02-2022 04:44:36pm
முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

தமிழகத்தில் நாளை நபர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்  21 மாநகராட்சிகள்,138 நகராட்சி,490.பேரூராட்சி களுக்கு நடைபெறுகின்றன.இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சித்தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறியும்,க்ரூரமாவட்ட திமுகவினர் கோவையில் முகாமைத்துள்ளதாகவும் அவர்களை வெளியேற்றிட வேண்டுமெனவும்,துணை ராணுவத்தினரை பயன்படுத்தவேண்டுமெனவும் கூறி   கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், அருண்குமார்,,கந்தசாமி, அமுல் கந்தசாமி, ,செல்வராஜ், , ஜெயராம்  ஆகிய 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டமானது தொடரப்பட்ட நிலையில் காவல்துறையினர் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.இதனால் அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.தற்போது அனைவரும் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு

 

Tags : 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

Share via