பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்

by Admin / 06-03-2022 02:07:30pm
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்

பால்வெளி மண்டலத்தில் காஸ்மிக் கதிர்கள் இடையே சிக்கிய இரு கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றி வந்து நடனம் போல் இருந்த காட்சியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பி கே எஸ் 2131-021எனப்படும் இந்தக் கருந்துளைகள் தற்போது சுமார் 9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன.

இந்தக் கருந்துளைகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருவரை ஒருவர் சுற்றி வருவதுபோல் தோன்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து பத்தாயிரம் ஆண்டுகளில் இவை இரண்டும் இணையும் போது விண்வெளி முழுவதும் ஈர்ப்பு அலைகள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via