சீனா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்

by Staff / 20-03-2022 04:04:26pm
 சீனா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்

ரஷ்யாவுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவினால், அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீன அதிபருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனால் சீனா, ரஷ்யாவுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
இச்சூழலில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்துரையாடினார். 

இதுகுறித்து, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், சீனா, ரஷ்யாவுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கி உதவினால், அதற்கான பின் விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என, சீன அதிபரை ஜோ பைடன் நேரடியாகவே எச்சரித்ததாக கூறப்பட்டுள்ளது. 


 
 

 

Tags :

Share via