பெட்ரோல், டீசல் விலை உயர்வு

by Staff / 22-03-2022 03:48:12pm
பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 137 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யாவில் இருந்து சலுகையில் விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல், விலை குறைய கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், விலை உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via