13 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர் மட்டும் எஸ்பிகளை நியமித்தது ஆந்திரா அரசு

by Staff / 04-04-2022 02:14:50pm
13 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர் மட்டும் எஸ்பிகளை நியமித்தது ஆந்திரா அரசு

ஆந்திராவில் உருவாக்கப்பட்ட 13 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிகளை  நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் அவற்றை பிரித்து புதிதாக 13 மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெகன்மோகன் உருவாக்கினார்.

இதனால் ஆந்திர மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது இந்த நிலையில் திருப்பதியில் மாவட்ட ஆட்சியராக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி மாநகராட்சி ஆணையராக இருந்த கிரிஷா புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சித்தூர் எஸ்பியாக  ஒய் ரிஷாந்த்  திருப்பதி எஸ்பியாக பரமேஸ்வரர் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக நரசிம் கிஷோர் உள்பட 26 மாவட்டங்களுக்கு ஆட்சியர் மட்டுமே எஸ்பிகல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via