நிதிப் பற்றாக்குறை பாகிஸ்தானில் மின் உற்பத்தி பாதிப்பு
மின் உற்பத்தி நிலக்கரி இயற்கை எரிவாயு வாங்க போதிய நிதி இல்லாததால் பாகிஸ்தான் அரசு விடும் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் போர் விவகாரத்தால் ஏற்பட்ட உலகளவிய எரிசக்தி வினியோகம் குறைபாடுகளால் கடந்த 9 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானின் எரிசக்தி கொள்முதல் செலவு 15 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இயற்கை எரிவாயு என மின் உற்பத்திக்கு தேவையான பொருள்களை வாங்கும் அளவு போதிய நிதி இன்மையால் 3,500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆப்லைன் உற்பத்தி முறையிலும் இதே குளறுபடி நீடிப்பதாக புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தடை பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags :