இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும்

by Staff / 21-04-2022 02:47:40pm
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும்

இந்தியாவின் பொருளாதாரத்தின் உயர் வளர்ச்சி விகிதம் உலகுக்கு நற்செய்தி என பன்னாட்டு நிதியத்தின் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பன்னாட்டு நிதியத்தின் மேலாண் இயக்குநர்  கிறிஸ்டினா ஜீவா சந்தித்து பேசினார். இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 விழுக்காடாக இருக்கும் என்றும் இதர நாடுகளை காட்டிலும் விரைவான வளர்ச்சி விகிதம் என்றும் பன்னாட்டு நிதியம் தெரிவித்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டினா ஜீவா இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via