ஆப்கானில் இரண்டு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு 9 பேர் உயிரிழப்பு 13 பேர் படுகாயம்

by Staff / 29-04-2022 02:14:04pm
ஆப்கானில் இரண்டு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு 9 பேர் உயிரிழப்பு 13 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் பிலிங்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 பேரும் உயிரிழந்தனர் மேலும் 13 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மாசரி பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது ஊடகங்களில் வெளியான தகவலின்படி இந்த இரண்டு குண்டு வெடிப்புகளும் பொது போக்குவரத்து இலக்காக.கொண்டிருந்தன என்று கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாகாண சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனிடையே இந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via