விபத்தான காரில் இருந்து மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல்

by Staff / 06-05-2022 11:52:08am
விபத்தான காரில் இருந்து மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோடுகுலிஅருகே கார் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்து அங்கு சென்ற தொட்டம்பட்டி போலீசார் காரை சோதனைசெய்தபோது   காரில் இருந்து 16 மூட்டைகளில்ஹான்ஸ்  பாக்கெட்டுகள் மற்றும் 12 மூட்டைகள் விமல்பாக்குகள் அடங்கிய போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது .காரை ஓட்டி வந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தி வந்ததாக தெரிவித்ததை அடுத்து  அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via