குடியரசுத்தலைவர் தேர்தல் கூட்டணிக் கட்சியினருடன் பாஜக முக்கிய ஆலோசனை

by Staff / 08-05-2022 01:19:20pm
குடியரசுத்தலைவர் தேர்தல் கூட்டணிக் கட்சியினருடன் பாஜக முக்கிய ஆலோசனை

 குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த திட்டமீட்டுருக்கும்    நிலையில் பாஜக தனது கூட்டணிக் கட்சியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம் இறுதியில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தனது கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo