உரத் தட்டுப்பாட்டைப் போக்க தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா வருகை.

by Editor / 19-05-2022 09:13:40pm
 உரத் தட்டுப்பாட்டைப் போக்க தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா வருகை.

தமிழகத்தில் சமீபகாலமாக உரத் தட்டுப்பாடு என்பது நிலவி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், உரத்தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தென்மாவட்டங்களில் உள்ள அதிகப்படியான விவசாயம் செய்யும் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 1,223.1 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது -

 அதாவது, 21 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த யூரியா உரங்கள் இன்று நெல்லை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து லாரிகள் மூலம் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியினை வேளாண்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களுக்கு 370.8 மெட்ரிக் டன் யூரியாவும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களுக்கு 180 மெட்ரிக் டன் யூரியாவும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் அரசு உரக்கிடங்கு களுக்கு 45 மெட்ரிக் டன் ஏரியாவும், தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களுக்கு 252 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகளும், தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு விற்பனை மையங்களுக்கு 154.8 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களுக்கு 220.5 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 உரத் தட்டுப்பாட்டைப் போக்க தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா வருகை.
 

Tags : 1,223 metric tonnes of urea arriving in the southern districts to alleviate fertilizer shortage.

Share via