11 மாவட்டங்களில் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளுக்கு 17 கோடி ஒதுக்கீடு

by Editor / 31-05-2022 08:47:11am
11 மாவட்டங்களில் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளுக்கு 17 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், 11 மாவட்டங்களில், பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, 17.18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில், பழங்குடியின மக்களுக்கு தேவையான சாலை வசதி. குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல், பள்ளிகள் பராமரிப்பு, பழுது பார்த்தல் பணிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பழங்குடி யினர் நலத்துறை கீழ் செயல் பட்டு வரும், 92 அரசு பழங் குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு, பெஞ்சு மற்றும் மேஜைகள் வாங்க, 2.27 கோடி ரூபாய்.மலைப் பகுதிகளில் உள்ள, பழங்குடியினர் நல விடுதிகளுக்கு, 324 இரண்டடுக்கு கட்டில்கள் வாங்க, 58.59 லட்சம் ரூபாய் என, மொத்தம் 2.85 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளுக்கு 17 கோடி ஒதுக்கீடு
 

Tags : An allocation of `17 crore for the basic needs of the tribal people in 11 districts

Share via