படகுகளில் இருந்த என்ஜின்களை ஆற்றில் தூக்கி வீசியதால் போலீசார் குவிப்பு

by Editor / 18-06-2022 09:30:52am
படகுகளில் இருந்த என்ஜின்களை ஆற்றில் தூக்கி வீசியதால் போலீசார் குவிப்பு

நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் கீழ பட்டினச்சேரி மற்றும் மேல பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது.இந்த நிலையில் நாகூர் துறைமுகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 7 பைபர் படகுகளில் இருந்த என்ஜின்களை தண்ணீரில் தூக்கிய வீசியதால் இருக்கிராமங்கள் இடையே மோதல் ஏற்ப்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் ஆற்றில் இருந்து பைபர் படகுகளின் எஞ்சின்களை மேலே தூக்கி எடுக்கும் பணியில் மீனவர்கள்ஈடுபட்டுள்ளனர்.

கட்டி வைக்கப்பட்டு இருந்த படகுகளின் கயிறுகளை  அறுத்து விடப்பட்டதால் மீனவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.இதன் காரணமாக துறைமுகத்தில் ஏராளமான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாகவும்,மீனவ பெண்கள் கதறி அழுது வருகின்றனர்.இரு தரப்பு மீனவர்களும் எதிரெதிரே மோதி கொள்ளும் சூழல் உருவாகி உள்ளதால், இரண்டு புறமும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.மீனவ கிராமங்களுக்கிடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

Tags : Police concentrated as the engines in the boats were thrown into the river

Share via