மதுரை மாவட்டத்தில் 85 நூலகங்களுக்கு 13 ஆயிரம் நூல்கள்

by Editor / 18-06-2022 09:49:49am
மதுரை மாவட்டத்தில் 85 நூலகங்களுக்கு 13 ஆயிரம் நூல்கள்

மதுரை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித்தரும் நோக்கத்துடன் சு.வெங்கடேசன் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான 164 நூல்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் காணொலி வழியாக தலைமைச்செயலகத்தில் இருந்து பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழுநேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் ஆகிய 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூல் அடுக்குகள் வழங்கப்பட்டது.

 

Tags : 13 thousand books for 85 libraries in Madurai district

Share via