வெளியானது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 90.07% சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

by Editor / 27-06-2022 11:26:44am
வெளியானது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்   90.07% சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

தமிழகத்தில் 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 10- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 30 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். அதனை திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 11 ஆம் வகுப்பு பொது தேர்வை மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 319 மாணவியர்கள் எழுதிய நிலையில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது 94.99 சதவீதமாகும். இதேபோல்  11 ஆம் வகுப்பு பொது தேர்வை மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 355 மாணவர்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.86 சதவீதமாகும். ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதிய நிலையில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை காட்டிலும் மாணவியர் 10.13 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
 
தமிழகம் முழுவதும் இயற்பியல் பாடத்தில் 714 பேரும், வேதியியல் பாடத்தில் 138 பேரும், உயிரியல் பிரிவில் 383 பேரும், கணிதம் பாடத்தில் 815 பேரும், தாவரவியல் பிரிவில் 3 பேரும், விலங்கியல் பாடத்தில் 16 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 873 பேரும் வணிகவியலில் 821 பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், கணக்கு பதிவியல் பிரிவில் 2163 பேரும், பொருளியல் பிரிவில் 637 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2186 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் 291 பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளப் பக்கங்களுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறித்து அறிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

 

Tags :

Share via