மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

by Editor / 23-07-2022 10:26:00am
மாணவி ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் கணேசன் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாணவியின் பெற்றோர் அழுதபடியே வந்து உடலை பெற்றுக் கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் ஆம்புலன்சில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதிச்சடங்குக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த +2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர். பின் 14ம் தேதி முதல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பின்னர் பிரேத பரிசோதனையில் சந்தேகம் உள்ளதாக கூறி மாணவர்கள், உறவினர்கள், பல்வேறு அமைப்புகளுடன் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 17ம் தேதி வன்முறையாக வெடித்தது. உயர்நீதிமன்ற உத்தரப்படி சிறப்பு மருத்துவ குழுவினர் அமைத்து மறு பிரேத பரிசோதனை நடைபெற்றது. 10 நாட்களாக மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. மகளின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் 22ம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மகளின் உடலை அவரது  பெற்றோர் இன்று பெற்றுக் கொண்டனர்.

 

Tags : The body of student Smt. was handed over to her parents

Share via