ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமியை கைகளில் தாங்கி பிடித்து காப்பாற்றிய இளைஞர்

by Editor / 24-07-2022 04:11:44pm
ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமியை கைகளில் தாங்கி பிடித்து காப்பாற்றிய இளைஞர்

சீனாவின் zhejiangமாகாணத்தில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பத்திரமாக பிடித்து காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. tongxiangசாலை ஒன்றில் என்ற இளைஞர் தனது காரை நிறுத்திக் shen dongகொண்டு இருந்தார். அப்போது எதிரே இருந்த உயரமான கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இரண்டரை வயது சிறுமி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதனை கண்ட அந்த இளைஞருக்கு கண நேரமும் தாமதிக்காமல் ஓடிச்சென்று சரியாக அந்த குழந்தையை தன் இரு கைகளாலும் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார். நெஞ்சை பதைபதைக்க செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via