இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தொலைக்காட்சி விவாதத்தில் மயங்கி விழுந்த தொகுப்பாளர்
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தொலைக்காட்சி விவாத தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் விவாதம் தடைபட்டது. போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ள நிலையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே பிரதமர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. தொலைக்காட்சி விவாதத்தில் நேற்று பங்கேற்றிருந்த நிலையில் அதை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர் அறிவுரைப்படி கேட் மேக்கன் விவாதத்தை தொடர முடியாத நிலையில் இயன் காலின்ஸ் என்பவர் மூலம் விவாதம் தொடர்ந்தது.
Tags :