சாலை ஓரக்கடைகளுக்கு பட்டாசு கடை உரிமம் வழங்கப்படமாட்டாது

by Editor / 29-07-2022 05:38:34pm
 சாலை ஓரக்கடைகளுக்கு பட்டாசு கடை உரிமம் வழங்கப்படமாட்டாது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற  விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008 - ன் படி வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின் படி விருப்பம்  ஆவணங்களுடன் மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் வரும் 09.09.2022க்குள் சமர்ப்பிக்க உத்தரவு. பாஸ்போர்ட் புகைப்படம், தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று,  உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் இணைக்கப்பட வேண்டும். சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : Firecracker shop licenses will not be issued to roadside shops

Share via