இந்தியாவில் புதிதாக 16,299 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் புதிதாக 16,299 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,06,996ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 54 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 526879ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,431 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,55,041 ஆக உயர்ந்துள்ளது.
Tags :