இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை

by Editor / 21-08-2022 04:10:14pm
இலங்கை தமிழர்கள் 8 பேர் தமிழகம் வருகை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 133 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு மாத கைக்குழந்தையுடன் மேலும் 8 இலங்கை தமிழர்கள் நேற்று இரவு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்தடைந்தனர். இலங்கை யாழ்பாணம் மாவட்டம் கிருபாகரன் அவரது மனைவி சாந்தி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் மேலும் கிளிநொச்சி மாவட்டம் சேர்ந்த சந்திரகுமார், அவரது மனைவி டெலிசித்திரம், அவர்களது இரண்டு மாத கைக்குழந்தை என மொத்தமாக 8 பேர் இலங்கையிலிருந்து படகில் நேற்று காலை புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாம் மணல் தீடை பகுதியில் நேற்று இரவு வந்து இறங்கினர்.

இதுகுறித்து தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையானர் மூன்றாவது மணல் தீடையிலிருந்த இலங்கைத் தமிழர்களை ஃஹேவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் போலீசாரம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். மேலும் தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via