பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு செப்டம்பர் 4-ம் தேதி மீண்டும் நீட் தேர்வு எழுத வாய்ப்பு.

by Editor / 27-08-2022 03:41:37pm
 பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு செப்டம்பர் 4-ம் தேதி மீண்டும் நீட் தேர்வு எழுத வாய்ப்பு.

கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றக்கோரி தேர்வு கண்காணிப்பாளர்கள் நடந்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த ஜுலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வின்போது கேரளாவின் கொல்லத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்கு முன், உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை கொல்லத்தில் உள்ள எஸ்என் பள்ளியில் மறு தேர்வு நடைபெறும்.

கொல்லம் ஆயூரில் உள்ள மார் தோமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நீட் தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகளுக்கு மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் மறுதேர்வு எழுதலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். அவர்கள் எழுதவில்லை என்றால், முன்பு நடத்தப்பட்ட தேர்வு முடிவு பரிசீலிக்கப்படும்.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மையத்தில் நடந்த சோதனை சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via