இன்று விநாயக சதுர்த்தி

by Admin / 31-08-2022 05:38:34am
இன்று விநாயக சதுர்த்தி

இன்று விநாயக சதுர்த்தி..இந்தியா முழுவதுமுள்ள இந்துக்கள்,சமணர்கள், பெளத்தர்கள் கொண்டாடும் கோலகலாமாககொண்டாடும் வ்ழா.இந்து மதத்தில் அனைத்து நல்ல செயல்களின் தொட்க்கமாக வழிபடப்படும்  தெய்வம் விநாயகர்.அவரின் பிறந்த  நாளை விநாயக சதுர்த்தியாக  களி மண்ணால் ஆகிய உருவத்தை வைத்து வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுவதால், ஆவணிமாதம்  சுக்லபட்ச சதுர்த்தி முதல் தொடர்ந்து  விரதத்தை  மேற்கொள்வது  நல்லது. அன்று  அதி காலையில் நீராடி , முழு நாளும்  விரதமிருந்து ,உணவு  உட் கொள்ளாமல்   பால்,பழம் மட்டும்அருந்துவது சிறப்பானது.ஆலயத்திற்குச்சென்று விநாயக பெருமானுக்கு நடைபெறும் அபிஷே ஆராதனைகளைக்கண்டுவழிபட வேண்டும்,அன்றைய தினம் ஆலயத்தைப்பதினோறு முறை வலம் வரும் பொழுது விநாயகர்  அகவலையோ, விநாயகர் கவசங்களையோ, கற்பக விநாயகர் காரிய  சித்தி  மாலையையோ,கணேசர்  காயத்ரி ஸ்லோகங்களையோ படித்து விரதத்தை முடித்துக் கொள்ள  வேண்டும் .விநாயகப்பெருமானுக்கு  அருகம் புல் மாலை ,வில்வ இலை மாலை ,எருக்கம்பூமாலை,மல்லிகைப்பூ மாலை,செம்பருத்தி மாலை இவற்றில் ஒன்றை அணிவித்து Cவது சிறப்பு , பார்வதி தேவி  இவ்விரதம்   கடைபிடித்து    சிவ பெருமானை அடைந்ததாகப்  புராணங்கள்  கூறுகின்றன.பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்ற பொழுது இவிவிரத்தை கடைபிடித்து  கெளரவர்களை  வென்றாகவும் இந்திரன்  இவ்விரத்தின் மூலமே வல்லமை பெற்றதாகச்சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via