கொரோனா காலத்தில்பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய முடியாதுஅமைச்சர் மா.சு

by Editor / 01-09-2022 01:57:29pm
 கொரோனா காலத்தில்பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய முடியாதுஅமைச்சர் மா.சு

பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய முடியாது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருவாரூரில் பேட்டி

அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம். அந்த வகையில் ஏற்கனவே 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனங்கள் செய்யப்பட்ட பொழுது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடந்த நேர்காணலில் கொரோனா காலத்தில் பணியாற்றிய நபர்களுக்கு 20 சிறப்பு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு பணியில் அமர்த்தபட்டார்கள்.

பணியமர்த்தப்பட்ட 7,448 நபர்களில் 50 சதவீதம் நபர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றிய நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பணியிடங்கள் நிரப்பப்படும் பொழுது கொரோனா காலத்தில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றியவர்களை நிரந்தரப்படுத்த முடியாது,திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

Tags :

Share via