நாடு முழுவதும் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

by Editor / 02-09-2022 07:21:17pm
 நாடு முழுவதும் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது இப்பொழுது மிகவும் யோசனைக்குரியதாக இருக்கிறது. காரணம் டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், திரையரங்குகளில் விற்கப்படும் உணவு விலை என 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் குறைந்தது ரூ.1000 செலவாகும்.

சமீபத்தில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டதற்கு காரணம் டிக்கெட் விலை ஒரு காரணமாக கூறப்பட்டது. அதனால் பெரும்பாலும் ஓடிடியிலேயே படம் பார்க்க விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 16 ம் தேதி மட்டும் டிக்கெட் விலை ரூ.75தான். காரணம் இதுதான். தேசிய சினிமா தினத்தை முன்னிட்டுநாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன.

 

 

Tags :

Share via