11 ஆயிரம் கோடி மாநில அரசு செலவளித்தால் 9 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கும் -அமைச்சர் கே.என்.நேரு

by Editor / 02-09-2022 10:57:58pm
 11 ஆயிரம் கோடி மாநில அரசு செலவளித்தால் 9 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கும் -அமைச்சர் கே.என்.நேரு

விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி நிர்வாக துறையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் சி்வ்தாஸ்மீனா திட்ட விளக்க உரையாற்றினார்.

நகராட்சி நிர்வாகத் துறையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேரூராட்சி தலைவர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ”நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்காக நடப்பாண்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், குடிநீர் மழைநீர் வடிகால் பல்வேறு வகையான கட்டிடங்கள், பாதாள சாக்கடைகள் ஆகியவற்றை மக்கள் கோரிக்கையாக வைப்பதாகவும் ஓராண்டுக்குள் வளர்ச்சி பணிகளில் பெரும் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் கடந்தாண்டு ஜல்ஜீவன் திட்டத்தில் 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், நடப்பாண்டு 6 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாகவும் 11 ஆயிரம் கோடி மாநில அரசு செலவளித்தால் 9 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் குப்பையும் குப்பை தொட்டியும் இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு திட்டங்கள் தீட்டி வருவதாகவும் அதற்கு தேவையான பணியாட்களை நியமனம் செய்ய நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.” என்று கூறினார்.

 

Tags :

Share via