போலி மெசேஜை கிளிக் செய்ததால் மின் கட்டணம் ரூ.1.68 லட்சம் நூதன மோசடி.

by Editor / 06-09-2022 01:15:38pm
போலி மெசேஜை கிளிக் செய்ததால் மின் கட்டணம் ரூ.1.68 லட்சம் நூதன மோசடி.

மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் அவாதியா மாநில சுரங்கத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மின் கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளையை கட் செய்யப்போகிறோம். முறையான விவரங்களை இந்த ஆப்பில் பார்க்கவும் என வந்துள்ளது. உடனடியாக பதறிப்போய் ராஜேஷ்குமார் அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய லிங்கை கிளிக் செய்துள்ளார். அந்த லிங்கை கிளிக் செய்த சிறிது நேரத்தில் இவரின் இரு வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1.68 லட்சம் தொகை பறிபோயுள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த போன ராஜேஷ் அருகே உள்ள காபேர்கேதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. பல நகரங்களில் மின் கட்டணம் தொடர்பான மோசடிகளில் ஹேக்கர்கள் ஈடுபடுவதாக புகார்கள் பதிவாகியுள்ளது. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி மக்களிடம் சைபர் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via