கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிவு பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

by Editor / 11-09-2022 03:40:08pm
கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிவு பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குமரி மாவட்டத்தில் ஒரு வாரம் தங்கி இருந்து அதற்கான திட்டமிடுதலை மேற்கொண்டார். கன்னியாகுமரி அருகே நரி குளத்தில் உள்ள பாலத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். அதற்கான கல்வெட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டை சேதப்படுத்தி உள்ளனர். கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சி நடந்துள்ளது.இதற்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் திட்டமிட்டு உள்ளார். இது தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பெயரை குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் அந்த கல்வெட்டை சேதப்படுத்தியதாக புகார் மனு பதிவு செய்துள்ளனர்.

எனவே பிரதமர் மோடியின் கல்வெட்டை சேதப்படுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் குமரி மாவட்ட பாரதியஜனதா சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via