தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

by Editor / 13-09-2022 11:42:52am
தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 16ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 252.3 மி.மீ. அளவுக்கு மழை இயல்பாக பதிவாகவேண்டும். ஆனால் இயல்பான அளவையும் தாண்டி 455.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via