மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் விரைவில்.........

by Staff / 21-02-2023 01:31:06pm
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் விரைவில்.........

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய நற்செய்தி வரப்போகிறது. 7வது ஊதியக்குழுவை அடுத்து விரைவில் 8வது ஊதியக்குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44% அதிகமாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. பழைய கமிஷனை விட இந்த புதிய சம்பள கமிஷனில் பல மாற்றங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்களின் தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000. ஆனால் 8வது ஊதியக் குழுவின் படி ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்கலாம்.

 

Tags :

Share via