வாட்ஸ்ஆப், ஜூம், கூகுள் டியோ இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும்- மத்திய அரசு

by Staff / 23-09-2022 10:49:49am
வாட்ஸ்ஆப், ஜூம், கூகுள் டியோ இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும்- மத்திய அரசு

வாட்ஸ்ஆப், ஜூம், கூகுள் டியோ ஆகியவை இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும் என புதிய மசோதாவில் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிய விரைவு தொலைத்தொடர்பு மசோதா 2022-ஐ உருவாக்கி உள்ளது. பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக இணையதளத்தில் மசோதா குறித்த விவரங்கள் வெளியிட்டுள்ளனர்.

 

Tags :

Share via