முழு அடைப்பை எதிர்கொள்ள காவல்துறை அறிவுறுத்தல்

by Staff / 23-09-2022 11:06:25am
முழு அடைப்பை எதிர்கொள்ள காவல்துறை அறிவுறுத்தல்


கடைகளை அடைத்தால் வழக்கு; முழு அடைப்பை எதிர்கொள்ள காவல்துறை அறிவுறுத்தல்
கடைகளை அடைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், முழு அடைப்பு போராட்டத்தை பொருட்படுத்தாமல் எதிர்கொள்ளவும் கேரள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. இதில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராடத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்தது.

இதனை தொடர்ந்து, கேரளாவில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கும் மாநில காவல்துறை தலைவர் அனில் காந்த் உத்தரவிட்டுள்ளார்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள், சட்டத்தை மீறுபவர்கள் மற்றும் கடைகளை வலுக்கட்டாயமாக மூடுபவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பொது இடங்களில் கூடாமல் இருப்பதை போலீசார் உறுதி செய்வார்கள். தேவைப்பட்டால் தற்காலிக காவலில் வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு பாலத்திற்காக மாநிலத்தின் முழு காவல்துறையும் ஈடுபடுத்தப்படும். ரேஞ்ச் டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவின் ஏடிஜிபிகள் ஆகியோர் மாவட்ட காவல்துறை தலைவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு வகிக்கின்றனர்.

 

Tags :

Share via