ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திய இமாம் சங்கத்தலைவர் சந்திப்பு

by Writer / 23-09-2022 03:45:25pm
ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திய இமாம் சங்கத்தலைவர் சந்திப்பு

இந்திய  மக்கள் மதத்தால்  பிரிவு நிலையை அடையக்கூடாது என்கிற  நல்ல நோக்கத்தில் பல்வேறு மத குருமார்களை
சந்திக்கும்  முகமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் டெல்லியில் அகில இந்திய இமாம் அமைப்புத்தலைவர்
உமர் அகமது  இஸ்யாஸியை  அவர் அழைப்பின் பேரில் சந்தித்தார் .இச்சந்திப்பிற்குப் பின்பு இமாம்,"நான் அழைத்ததன்
அடிப்படையில் ,மோகன் பகவத்  வருகை  புரிந்தார் .அவர்  ராஷ்ட்ர பிதா..அவர்  வருகையை  அடுத்து  நல்ல செய்தி கிடைக்கும். இந்தியாவில் வாழும் இந்து-முஸ்லீம்களாகிய நாம் கடவுள் வழிபாட்டில்  மட்டும்  வேறுபட்டுள்ளோம்.மற்றபடி
நாம் அனைவரும் ஒன்றுதான்" என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via