தமிழகத்தில் 6ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

by Editor / 03-10-2022 08:38:57am
தமிழகத்தில்  6ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால், கடந்த சில மாதங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. தென்மேற்கு பருவமழை காலம் முடிந்த பின்னரும், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 03.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

04.10.2022 முதல் 06.10.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது இதனால், அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via