எகிப்துக்கு தப்பிச் செல்லுங்கள்

by Staff / 10-10-2023 12:48:27pm
எகிப்துக்கு தப்பிச் செல்லுங்கள்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், காசா மக்களை பாதுகாப்பாக எகிப்துக்கு தப்பிச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. வாய்ப்பு இருக்கும்போது, ராஃபா வழியாக எகிப்துக்கு தப்பிச்செல்ல இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ரிச்சர்ட் ஹெக்ட் அறிவுறுத்தியுள்ளார். காசாவில் குண்டுமழை பொழியும் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், இஸ்ரேல் - காசா எல்லையை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. காசாவில் ஹமாஸுக்கு நரகத்தின் வாயிலை காட்டுவோம் என இஸ்ரேல் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via