அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி!

by Editor / 24-07-2021 10:52:04am
அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி!

அதானியின் கிரீன் எனர்ஜி, டிரான்ஸ்மிஷன், எரிவாயு உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் 43,500 கோடி மதிப்பிலான கணக்குகளை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது. தேசிய பங்கு சந்தையில் முந்தைய நாள் வர்த்தக முடிவில் 1601.60ஆக இருந்த பங்கின் விலை நேற்று 91 குறைந்து, 1,510.35 ஆக சரிந்தது. இதனால் அதானி சொத்து மதிப்பில் ரூ.73,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது .

இதன் காரணமாக , அவர் , ஆசியாவின் 2 வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . புளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி , ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 2 வது இடத்தில் உள்ளார் . இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 5.64 லட்சம் கோடியாகவும் , அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் 9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது .

அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி!

 

Tags :

Share via