தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலளிப்பார்

by Staff / 06-10-2022 04:53:48pm
தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலளிப்பார்

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் இலவசங்கள் குறித்து எந்த வகையில் அந்த இலவசங்கள் வழங்கப்படுகிறது அதற்கான நிதி குறித்து எழுத்துப்பூர்வமாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருக்கிறது.

இந்த கடிதம் குறித்து பதில் அளிக்க வேண்டியது அரசியல் கட்சித் தலைவர்கள் தான். நான் எனது கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும் மாநில நிதி அமைச்சர் என்ற முறையில் அல்லது சராசரி ஒரு மனிதன் பகுத்தறிவு சிந்தனையுடன் சொல்லும் கருத்து என்னவென்றால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது நாங்கள் எந்த குழுவும் அமைக்கவில்லை என்று கூறிவிட்டு தற்போது கூறும் கருத்து என்பது முரண்பாடாக இருக்கிறது. அப்போதே திராவிட முன்னேற்றக் கழகம் இந்த வழக்கு குறித்து எங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியது. இந்த கருத்துக்கு அரசியல் அனுபவம் வாய்ந்த எங்கள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார் என்றார்.

 

Tags :

Share via