குற்றாலம் குற்றால நாதர் ஆலயத்தில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்தோடு தொடங்கியது.

by Editor / 09-10-2022 08:57:05am
குற்றாலம் குற்றால நாதர் ஆலயத்தில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்தோடு தொடங்கியது.


சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையான குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்தோடு காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் தொடங்கியது.
திரிகூடநாதர் என்றும் குற்றால நாதர் என்றும் அழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகார வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது. குற்றால நாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசு, ஐப்பசி விசு திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், தாண்டவ தீபாராதனை நடைபெற்று வருகிறது. திருவிழாவின் வரும் 12 ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு,13ஆம் தேதி காலை 8.30 மணிக்கு 4 திருத்தேர்கள் ஓடும் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.இதில்  விநாயகர் தேர்,முருகர் தேர்,குற்றாலநாதர்,செண்பக குழல்வாய் மொழியம்மை தேர் என 4 தேர்களின் தேரோட்டமும்,15ஆம் தேதி காலை 9.30 மணிக்கும் இரவு 7மணிக்கும் நடராஜமூர்த்திக்கு  தாண்டவ தீபாராதனையும்,  16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு  மணிக்கு மேல் சித்திர சபையில் வைத்து நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடைபெறுகிறது.

 

Tags :

Share via