தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

by Staff / 10-10-2022 11:30:00am
 தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம், சிவில் சப்ளை கழகம், வீட்டு வசதி வாரியம், ரப்பர் மற்றும் தோட்ட வாரியம், சர்க்கரை கழகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 சதவிகித அளவில் போனஸ் மற்றும் கருணை தொகையாக அளித்திடும் வகையில் தமிழக அரசு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via