40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி

by Staff / 10-10-2022 04:38:25pm
40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி

பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார்

 

Tags :

Share via