முக்கிய நிகழ்வுகள்..

by Editor / 11-10-2022 10:22:33am
முக்கிய நிகழ்வுகள்..

1958-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.

1968-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி நாசா முதல் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.

1908-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திரைப்பட நடிகை கே.பி.சுந்தராம்பாள் பிறந்தார்.


முக்கிய தினம் :-

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 
 பெண் சிசுவை பிறக்க விடக்கூடாது என்னும் பழமையான கண்ணோட்டத்திற்கு நவீன கண்டுபிடிப்பு கருவியும் துணைப்போவது தான் துயரம். தப்பி தவறி பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து மறைய வேண்டியிருக்கிறது.

 உடை, படிப்பு, விளையாட்டுப் பொருள் என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை சந்திக்கும் பெண் குழந்தைகள் இளமையிலிருந்தே ஒவ்வொரு தடைகளையும் கடந்து தான் வளர்கிறார்கள்.

 பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011-ஆம் ஆண்டு ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11-ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


பிறந்த நாள் :-

சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், மறுமலர்ச்சி கவிஞருமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள குளத்தூரில் பிறந்தார்.

இவர் மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணிபுரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.

தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான சாமுவேல் வேதநாயகம் பிள்ளை 62-வது வயதில் (1889) மறைந்தார்.


ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ்
தற்காலப் பேரண்டவியல் கருத்துகளுக்கு முன்னோடியாக அரிய சிந்தனையை எழுப்பிய ஜெர்மானிய மருத்துவர், வானவியலாளர் ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் 1758-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி பிறந்தார்வால் நட்சத்திரம் மற்றும் வால் நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை கணிக்கும்முறையை கண்டறிந்தவர். சிறுகோள் பாறைகளான பல்லாஸ், வெஸ்டா ஆகியவற்றை கண்டறிந்தவர்.

 வானவியலில் பேரார்வம் கொண்டிருந்த இவர் 1840-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி மறைந்தார்.

 

Tags :

Share via