கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அளப்பங்கோடு யானைகள் ஊர்வலம் துவக்கம்.

by Editor / 31-12-2022 10:51:21pm
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம்  அளப்பங்கோடு யானைகள் ஊர்வலம் துவக்கம்.

 

பிரசித்தி பெற்ற  ஆலயங்களுள் ஒன்றானது  மேல்புறம் அளப்பங்கோடு ஸ்ரீபூதத்தான் திருக்கோவில் .இத்திருக்கோவிலில் தமிழகத்தில் அதிகளவில் யானைகள் கலந்து கொள்ளும்  ஊர்வலமாக கருதபட்டுவருகிறது.  பாரம்பரியமிக்க யானைகள் ஊர்வலம் கொரோனா ஊரடங்கு காரணமாக களையிழந்து ஒரு யானையை மட்டுமே கொண்டு ஊர்வலம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்கழி திருவிழா கடந்த 28தேதி  துவங்கியது இதையடுத்து 4ஆம் திருவிழாவான இன்று பிரசித்திபெற்ற யானைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஆண்டு குறிப்பாக 6யானைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிலையில் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற  கொம்பன் யானையான  புதுப்பள்ளி சாபு யானை பங்கேற்றது முன்னதாக ஈந்திகாலை காரியத்தர ஸ்ரீ பூதத்தான் சாஸ்தா திருக்கோவிலிருந்து சாமி விக்ரகம் ஏற்றுவாங்கிய புதுபள்ளி சாபு யானை மற்ற 5 யானைகளுடன் ஊர்வலமாக அண்டுகோடு, பந்திபாலம், மேற்புறம் வழியாக அளப்பங்கோடு ஸ்ரீபூதத்தான் ஆலயத்தில் வந்தடைந்தது. சுமார் 5கிலோமீட்டர் நடைபெறும் ஊர்வலத்தில் சாலையில் இருபுறங்களில் பக்தர்கள் மலர்தூவி ஆரத்திஎடுத்து யானை மீது அமர்ந்து நகர்வலம் வந்த சாமியை வரவேற்றனர் இத்திருவிழாவில்  தமிழகம் மற்றும்  கேரளாவிலிருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றது குறிப்பிடதக்கது.

 

Tags :

Share via