ஆகாசா ஏர் விமானம் மீது பறவை மோதல்.

by Staff / 27-10-2022 04:23:16pm
ஆகாசா ஏர் விமானம் மீது பறவை மோதல்.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து டெல்லி நோக்கி ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் கியூ.பி. 1333 என்ற எண் கொண்ட போயிங் ரக விமானம் ஒன்று இன்று பறந்து சென்றது. இந்த நிலையில், ஆமதாபாத் நகரில் இருந்து கிளம்பி மேலெழுந்து சென்ற விமானத்தின் மீது நடுவழியில் 1,900 அடி உயரத்தில் திடீரென பறவை ஒன்று மோதியது. எனினும், விமானம் தரையிறங்க வேண்டிய பகுதியில் பாதுகாப்புடன் இறங்கியுள்ளது என ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார்.

 

Tags :

Share via