எஸ். எம். எஸ் அனுப்பி. 18 லட்சம் மோசடி செய்த பெண்

by Staff / 30-10-2022 05:22:19pm
எஸ். எம். எஸ் அனுப்பி. 18 லட்சம் மோசடி செய்த பெண்

சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் பார்த்திபன் (வயது 22). இவருக்கு கடந்த வாரம் ஜெர்மனியில் இருந்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று எஸ். எம். எஸ் வந்துள்ளது. அதை நம்பிய பார்த்திபன், எஸ். எம். எஸ். சில் குறிப்பிட்ட மெயிலில் தொடர்பு கொண்டபோது, லிசா பிஞ்சு என்ற பெண் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபங்களை பற்றி எடுத்துரைத்து உள்ளார். இதையடுத்து, பார்த்திபன் ரூ. 18 லட்சத்தை கிரிப்டோ கரன்சி மதிப்பில் மாற்றி அந்தப் பெண் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பார்த்திபன் அந்த செயலியை பரிசோதித்தபோது, செயலி முடக்கப்பட்டு உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பார்த்திபன் இதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via