புதிய XBB வகை கொரோனா தொற்று

by Staff / 31-10-2022 01:12:36pm
 புதிய XBB வகை கொரோனா தொற்று

இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றான XBB என்ற தொற்று பரவி வருவதாக GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாக இந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில், "தமிழகத்தில் 175 பேரும் , மேற்கு வங்கத்தில் 103 பேரும் என நாடு முழுவதும் 380 பேர் XBB வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, கர்நாடகா, குஜராத் , ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, " தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் தற்போது கண்டறியப்படவில்லை. தொடர்ந்து வைரஸ்களின் உருமாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினர்.

 

Tags :

Share via